பேராதனையில் சொக்லேட் திருடியதாக முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த முதியர் சொக்லேட்டுகள் மீது அதீத விருப்பம் உடையவர் என்பதுடன் தினமும் தனக்கும் தனது மனைவியிற்கு சொக்லேட்டுகள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
போதிய பணம்
இந்தநிலையில், சொக்லேட்டுகள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற அவரிடம் போதிய பணம் இல்லாத காரணத்தினால் சொக்லேட்டுகள் சிலவற்றை அவர் கடையில் இருந்து திருடியுள்ளார்.
குறித்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகி இருந்த நிலையில், அடுத்த நாள் அவர் கடைக்கு சென்ற போது கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
கடையின் உரிமையாளர்
அவ்வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மரணப்படுக்கையில் இருந்த முதியவர் குறித்த விடயங்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளரும் அவரது ஊழியர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேராதனை காவல் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
