Home முக்கியச் செய்திகள் கொழும்பிற்கான மற்றுமொரு சர்வதேச விமான சேவை ஆரம்பம்

கொழும்பிற்கான மற்றுமொரு சர்வதேச விமான சேவை ஆரம்பம்

0

சோங்கிங் விமான நிறுவனம் (Chongqing Airlines) சோங்கிங் இலிருந்து கொழும்பு மற்றும் மாலே வரை புதிய சர்வதேச விமானசேவையை ஜூன் 24 முதல் தொடங்கவுள்ளது.

இந்த இடங்களுக்கிடையே சுற்றுலா, பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்த இந்த சேவை எதிர்பார்க்கப்படுகிறது.

சோங்கிங் ஏர்லைன்ஸ் இந்த வழிக்கு Airbus A320neo ஐப் பயன்படுத்தும்.

வாரத்திற்கு மூன்று தடவை 

வாரத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி என மூன்று தடவை விமான சேவைகள் நடைபெறும். விமான அட்டவணையில் CZ553 விமானம் அடங்கும்

திங்கள் மற்றும் வெள்ளிகளில் உள்ளூர் நேரப்படி 12.10க்கு சோங்கிங்கிலிருந்து புறப்பட்டு, மாலேவுக்குத் தொடர்வதற்கு முன் 15.30க்கு கொழும்பு வந்து சேரும்.

புதன்கிழமைகளில் சோங்கிங்கில்17.10க்கு இருந்து புறப்பட்டு மாலேக்கு 15.45, வந்து 20.55 ற்கு கொழும்பில் நிறுத்தப்படும்

CZ554 விமானத்தில் திரும்பும் பயணம்

CZ554 விமானத்தில் திரும்பும் பயணம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 18.20க்கு மாலேயில் இருந்து புறப்பட்டு, கொழும்பில் நிறுத்தப்பட்ட பிறகு, மறுநாள் 5.55க்கு சோங்கிங்கை சென்றடைகிறது.

புதன்கிழமைகளில், விமானம் 22.25க்கு மாலேயில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 10.30க்கு சோங்கிங்கை வந்தடையும்.

Source: https://ibctamil.com/article/chongqing-airlines-to-fly-to-colombo-1713695753?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version