Home உலகம் காசாவிற்கு இஸ்ரேல் கொடுத்த நத்தார் பரிசு : இணையத்தை கலங்க வைத்த புகைப்படம்!

காசாவிற்கு இஸ்ரேல் கொடுத்த நத்தார் பரிசு : இணையத்தை கலங்க வைத்த புகைப்படம்!

0

நத்தார் பண்டிகையானது இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

சமாதானத்தின் அடையாளமாக நத்தார் பண்டிகை காணப்பட்டாலும், மத்திய கிழக்கில் அவ்வாறான ஒரு சமாதானம் காணப்படுவதாக தென்படவில்லை.

இஸ்ரேல் (Israel) – ஹமாஸ் (Hamas) , உக்ரைன் – ரஷ்யா போர் என உலக அமைதி சிதைவடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் காசாவில் நத்தார் பண்டிகையானது இவ்வாறு தான இருக்கும் என சமுகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்பட பதிவில் “இந்த ஆண்டு, நத்தார் மரத்திற்கு பதிலாக இடிபாடுகளின் கீழ் நத்தார் தாத்தா பரிசுகளை வைப்பார்.

இஸ்ரேலின் மரியாதையுடன் காசா பகுதியில் கிறிஸ்துமஸ் மரம் இப்படித்தான் இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகைப்படமானது தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

YOU MAY LIKE THIS


https://instagram.com/p/DD9-ee4N1T7/embed/https://www.youtube.com/embed/OWYMGs1qoVA

NO COMMENTS

Exit mobile version