தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என
அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன்
என்பவரே கைது செய்யப்பட்டு இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த நபர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்தார்.
கைது நடவடிக்கை
இந்தநிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின்
பின்னர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை கொழும்பில் இருந்து
சென்ற குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
பிள்ளையானின் சகாக்கள்
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம்
ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன
சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையான் கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்
வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டு வரும் விசாரணையின் அடிப்படையில்
அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன்
என்பவரை சம்பவ தினம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
