முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிரான குற்றச்சாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வாசிப்பதற்கு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை குடியுரிமையின்றி இலங்கையின் கடவுச்சீட்டைப் பெற்றதாக டயானவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரான டயானா கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றில் முன்வைத்தனர்.
இதன்படி, குறித்த குற்றப்பத்திரிகையை ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் வாசிக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/cid-filed-the-charge-sheet-against-diana-gamage-1720696750
