Home இலங்கை சமூகம் வடக்கின் சிவில் சமூக செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

வடக்கின் சிவில் சமூக செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

0

மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்கியாக்களை திருப்பி
அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த சிவில் சமூக செயற்பாட்டாளரிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

வெகுஜன மக்கள் போராட்டம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக
தெரிவித்துள்ள பொலிஸார் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் ஃபிகிராடோவிடமே சுமார் ஐந்து மணி நேரம் விசாரணையை நடத்தியுள்ளனர்.

புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்

விசாரணையின் போது ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பீர்களா? என
குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அத்தகைய ஊக்குவிப்பை தான்
செய்யப்போவது இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளதாக யாட்சன் ஃபிகிராடோ குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும்
மேற்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு என்ன வகையான உதவிகள் வழங்கப்பட்டன? என குற்றப்
புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாங்கள் பெரிதாக உதவிகள் எதுவும் வழங்கவில்லை. ஆனால்
மனிதாபிமான அடிப்படையில் எங்கள் கருத்துக்களை வெளியிட்டோம். எங்களால்
இயன்ற சிறு சிறு உதவிகளை நாங்கள் அவர்களுக்கு முன்னெடுத்திருக்கின்றோம் என
அவர் கூறியுள்ளார்.

 சிவில் சமூகத்தை விசாரணைக்கு உட்படுத்துவது 

மேலும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட
போராட்டங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை
விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம்
தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிவில் சமூகத்தை விசாரணைக்கு உட்படுத்துவது மோசமான போக்கு என வடக்கு
கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் பிகிராடோ
ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மியன்மாரில் இருந்து சுமார் ஒரு இலட்சம் சட்டவிரோதக்
குடியேற்றவாசிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில்
நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும், இதுவரை ஒரு அகதி கூட இலங்கைக்கு
வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version