Home இலங்கை சமூகம் ஜனாதிபதி நிதிய முறைகேடு குறித்து ஆராய சி.ஐ.டி விசாரணை

ஜனாதிபதி நிதிய முறைகேடு குறித்து ஆராய சி.ஐ.டி விசாரணை

0

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் (President’s Fund) ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version