Home இலங்கை அரசியல் ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு பெரும்புள்ளி குறி வைத்துள்ள அநுர

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு பெரும்புள்ளி குறி வைத்துள்ள அநுர

0

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய மிக் ரக விமான கொடுக்கல், வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மகிந்த அரசாங்கத்தின் போது நிறுத்தப்பட்ட நிலையில், சமகால அரசாங்கத்தின் கீழ் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மிக் விமானம் கொள்வனவு

2007 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து மிக்-27 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 7.833 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

உதயங்க வீரதுங்கவும் ராஜபக்ச குடும்பத்தின் மிகவும் நெருங்கமான உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version