Home இலங்கை அரசியல் சொத்து விவகாரத்தில் சிக்கிய சிறீதரன்: விசாரணையை தொடங்கிய சிஐடியினர்

சொத்து விவகாரத்தில் சிக்கிய சிறீதரன்: விசாரணையை தொடங்கிய சிஐடியினர்

0

பிரித்தானியாவில் தற்போது தங்கியுள்ள சிறிலங்கா காவற்துறையின் புலனாய்வுப்பிரிவு அங்கு என்ற செய்கின்றது என்ற வினாக்கள் எழும் நிலையில் அந்த வினாக்களுக்கு ஓரளவு பருமட்டான விடைகள் கிட்டியுள்ளன.

டிஐஜி எனப்படும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் தங்கியுள்ள ஐந்து சிஐடி அதிகாரிகள் அடங்கியுள்ள இந்த குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் கடந்த 2023 செப்டெம்பரில் அரச நிதியில்
பிரித்தானிய பயணம் தொடர்பான புதிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றது.

உள்ளுரில் தமிழரசின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்தாக முறைப்பாடு செய்த சிறிலங்காவின் குடிசார் அமைப்பை சேர்ந்த சஞ்சீவ மஹவத்தவிடம் நேற்று ஆறு மணிநேர வாக்குமூலம் ஒன்றை சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் பெற்றுள்ளதால் வடக்கு தெற்காக சிஐடியினரின் புதிய நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/RGIpWislNOQ

NO COMMENTS

Exit mobile version