Home இலங்கை சமூகம் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் விசேட வேலைத்திட்டம்

குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் விசேட வேலைத்திட்டம்

0

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் சான்றிதழ்களை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இம்மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடு 

கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களினால் இம்மாதம் முழுவதும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒக்டோபர் மாதம் முழுவதும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/clarification-regarding-birth-certificate-1727950198

NO COMMENTS

Exit mobile version