Home இலங்கை குற்றம் திருகோணமலையில் குடி போதையில் நண்பர்களுக்கிடையில் கைகலப்பு: ஒருவர் பலி

திருகோணமலையில் குடி போதையில் நண்பர்களுக்கிடையில் கைகலப்பு: ஒருவர் பலி

0

Courtesy: H A Roshan

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கோயிலடி தம்பலகாமத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி பேரின்பராசா வயது (35) என்பவரே நேற்று (17) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குடி போதையில் கைகலப்பாகி மாறிய தாக்குதலினால் காயமடைந்த குறித்த நபர் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (16) இரவு 10.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகள்

இந்நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய கோயிலடி தம்பலகாமம் பகுதியை சேர்ந்த 22 மற்றும் 36 வயதுடைய இருவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/clash-between-drunken-friends-in-trincomalee-1729203128

NO COMMENTS

Exit mobile version