Home இலங்கை குற்றம் குடத்தனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: நால்வர் படுகாயம்

குடத்தனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: நால்வர் படுகாயம்

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் இரு
குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மோதல் நேற்றையதினம்(14.06.2025) இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. 

விசாரணை

இதில் படுகாயமடந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வவைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/clash-between-two-groups-in-kudathanai-1749945746

NO COMMENTS

Exit mobile version