Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்: மாணவன் தலையில் பலத்த காயம் – ஒருவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்: மாணவன் தலையில் பலத்த காயம் – ஒருவர் கைது

0

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர் குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – விசுவமடு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலேயே இவ்வாறு நேற்றைதினம் (25.10.2024) மோதல் ஏற்பட்டுள்ளது.

கருத்துவேறுபாடு

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, விசுவமடு வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக பிரிந்து மோதியுள்ளனர்.

குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் ஒரு மாணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் பல்வேறுபட்ட நிர்வாக நிதி மோசடிகள் தொடர்பில் ஏற்க்கனவே
பல செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/clash-in-groups-of-students-in-mullaitivu-school-1729912609

NO COMMENTS

Exit mobile version