Home இலங்கை குற்றம் பாடசாலை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மாணவிகள் உட்பட பலர் காயம்

பாடசாலை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மாணவிகள் உட்பட பலர் காயம்

0

கொழும்பு போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் மாணவிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(11.02.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த 11 பேரும் நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

பாடசாலையில் கெடட் பயிற்சி இடம்பெற்ற போது, முன்னாள் மாணவர் ஒருவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் குழுவொன்று மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/clashes-between-two-groups-at-a-school-1739318523

NO COMMENTS

Exit mobile version