Home இந்தியா மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம் : கவலையில் பெற்றோர்

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம் : கவலையில் பெற்றோர்

0

3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளமை மாணவியின் பெறறோரை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

லக்னோவில்(lucknow) உள்ள மான்ட்ஃபோர்ட் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிக்கே இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

மைதானத்தில் விளையாடியபோது ஏற்பட்ட மயக்கம்

சிங் என்ற 9 வயதுடைய மாணவி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பரிசோதனையில் வெளியான தகவல் 

உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதித்த போது மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வயது வித்தியாசம் இன்றி, தற்போது மாரடைப்பு வருகிறது. இதற்கு தவறான உணவு பழக்கவழக்கங்களே காரணமென தெரிவிக்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/class-3-student-died-of-heart-attack-1726405704

NO COMMENTS

Exit mobile version