Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட வகுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட வகுப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சித் திட்டம் 18.11.2025 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களிடையே தொடர்புத் திறன்களை வலுப்படுத்துவதையும் சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, அரசகரும மொழிகள் துறையின் ஆதரவுடன் நாடாளுமன்ற சேவைகள் அலுவலகத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

சிங்களம் – தமிழ் மொழிப் பயிற்சி

தொடக்க விழாவில் பேசிய சபாநாயகர் விக்ரமரத்ன,
இன மற்றும் மத பேதங்களை நிவர்த்தி செய்வதில் மொழியின் முக்கியத்துவம் மற்றும்
ஒரு குறிப்பிட்ட மொழியில் மக்கள் சரியாகத் தொடர்பு கொள்ள முடியாத போதே பல மோதல்கள் எழுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களிடையேயும் மரியாதையை வளர்ப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version