கிளீன் சிறீலங்கா(Clean Srilanka) வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மத்தியபேருந்து
நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்
கலந்துகொண்டிருந்தார்.
கடுமையான நடவடிக்கை
வேலைத்திட்டத்தில் இராணுவத்தினர், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபையினர்
உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இனிவரும் காலத்தில் பேருந்து நிலையத்தில் விளம்பரங்களை ஒட்டுபவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
