Home இலங்கை சமூகம் க்ளீன் ஸ்ரீலங்கா பெப்ரவரி முதலாம் திகதியே ஆரம்பமாகிறது

க்ளீன் ஸ்ரீலங்கா பெப்ரவரி முதலாம் திகதியே ஆரம்பமாகிறது

0

க்ளீன் ஸ்ரீலங்கா என்ற தூய்மையான இலங்கை திட்டம் குறித்து, நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த திட்டம் 2025 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியே நடைமுறைக்கு வருவதாக பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதம் 

ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க, ஜனவரி மாதம் என்பது, இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது அல்லது பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் உள்ள கூடுதல் பொருட்களை அகற்றுவது மட்டுமல்ல. அவற்றை விட பரந்த நோக்கங்களை கொண்டதாகும்.

இது பொதுவாக சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கவே முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் உள்ள மக்களை வலுவான தார்மீக விழுமியங்களைப் பின்பற்ற ஊக்குவிப்பதையும் இந்த திட்டம், நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version