Home இலங்கை சமூகம் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

0

திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தை சுத்தம் செய்து தயார்ப்படுத்திக் கொள்வதற்கான முதலாவது சிரமதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்தநிகழ்வானது இன்றைய தினம் (16.11.2024) நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

சிரமதானப் பணிகள்

2024ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாளினை முன்னிட்டு குறித்த சிரமதான பணிகள் நடாத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள்,
பொதுமக்கள், மற்றும் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்கள், போன்றோர் கலந்து
கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக எதிர்வரும் 24ஆம் திகதிவரை நினைவேந்தலுக்காக துயிலுமில்லத்தைத்
தயார்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் அனைவரையும் இந்தப் பணியில்
கலந்து கொள்ளுமாறும் நினைவேந்தல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Source: https://tamilwin.com/article/cleanup-work-begins-at-sambur-memorial-event-1731775588

NO COMMENTS

Exit mobile version