படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பிரபல வர்த்தகரான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கிளப் வசந்தவின் மனைவியும், பிரபல பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கிளப் வசந்தவின் மனைவி
இந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிளப் வசந்தவின் மனைவி அனுமதிக்கப்பட்டு மூன்று சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அங்கு, அவரது மார்பில் இருந்த தோட்டாக்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மெனிக் விஜேவர்தன தற்போது நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கிளப் வசந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விடயம் நேற்றையதினம் தான் அவருடைய மனைவி மெனிக் விஜேவர்தனவுக்கு தெரியவந்துள்ளதுடன், இதனால் அவர் கடும் மன வேதனையிலும் மன உளைச்சலிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
Source: https://ibctamil.com/article/club-vasantha-s-murder-updates-1723575983
