Home இலங்கை குற்றம் கிளப் வசந்த படுகொலை: அரசியல்வாதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிளப் வசந்த படுகொலை: அரசியல்வாதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

கிளப் வசந்த என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர பெரேராவின் படுகொலை தொடர்பில் 2 ஆவது துப்பாக்கிதாரி மற்றும் கார் சாரதிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவை செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளப் வசந்த கொலை விவகாரம் தொடர்பில் பாணந்துறை பகுதியில்  (28) திகதி இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட தினத்தன்று, டுபாயில் உள்ள ஒருவரின் ஒருங்கிணைப்பின் பேரில், அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு தாங்கள் மற்றும் குழுவினர் வந்ததாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

அரசியல்வாதி அடைக்கலம்

இந்த கொலைக்காக சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தினை வழங்கி மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவின் வீட்டில் தங்குமாறு டுபாயில் இருந்து பணிப்புரைகள் கிடைத்ததாக அவர்கள் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த உத்தரவிற்கமைய 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்ததாகவும், அமல் சில்வா தனது பாவனைக்காக தொலைபேசியொன்றை வழங்கியுள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இதன்படி, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா, மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version