Home முக்கியச் செய்திகள் இரண்டு வயது குழந்தைக்கு எமனான தேங்காய் – மனதை உருக்கும் சோக சம்பவம்

இரண்டு வயது குழந்தைக்கு எமனான தேங்காய் – மனதை உருக்கும் சோக சம்பவம்

0

தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இறுதிச் சடங்கு செய்யக் கூட வசதி இல்லை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் வேலை செய்யும் அவரது தாயும் தந்தையும் பணியில் இருந்த போதே குழந்தை இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சுயநினைவை இழந்த சஸ்மித், மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரது நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை குழந்தை உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையில் வாடும் சஸ்மித்தின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யக் கூட வசதி இல்லாததால், குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version