Home இலங்கை சமூகம் தேங்காய் மற்றும் எண்ணெயின் விலை தொடர்பில் வெளியான தகவல்

தேங்காய் மற்றும் எண்ணெயின் விலை தொடர்பில் வெளியான தகவல்

0

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை 400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலையும் 560 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்யின் விலை

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னதாக தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக இருந்தது.

எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது.

விசேட பொருளாதார நிலையங்கள் 

இந்நிலையில், தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு தேங்காய் கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தேங்காய் விலை குறையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பால் அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு கட்டுப்பாடான விலையில் உணவு வழங்கும் வியாபாரிகள் உணவு தயாரிப்பதில் பெரும் செலவுகளை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version