Home இலங்கை சமூகம் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

0

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளமையினால் இந்தநிலை ஏற்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நேற்று (22) மகிந்த அமரவீரவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தேங்காய் எண்ணெய்

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் போது துறைமுகத்தில் செலுத்தப்படும் வரிக்கு மேலதிகமாக தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வரி செலுத்த வேண்டியிருப்பதால் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிக வரி விதிப்பினால் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பானது தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version