Home இலங்கை சமூகம் நாட்டில் உச்சத்தைத் தொடும் மரக்கறியின் விலை

நாட்டில் உச்சத்தைத் தொடும் மரக்கறியின் விலை

0

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்
வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை உயர்வடைய கூடும் என  சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயத்தை கொழும்பு (Colombo) மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்ச்செய்கைகள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மரக்கறிகளின் விலை

எனவே எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை உயரும் என்பது
வெளிப்படையானது என அவர் தெரிவித்துள்ளார். 

‘வானிலை மாற்றங்களுக்கு முன்பு விலை குறைவாக இருந்தன. அது
விவசாயிகளைப் பாதித்தது. 

இருப்பினும் வரும் நாட்களில் விலை நிச்சயமாக உயரும்.

அத்துடன் இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக
வானிலை இப்போது மரக்கறிகளின் விலையை பாதிக்கும் ஒரு முக்கிய
காரணியாக மாறியுள்ளது என்றார்.

NO COMMENTS

Exit mobile version