Home முக்கியச் செய்திகள் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

0

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.

தேங்காய் விலை 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முட்டை விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தற்போது சில பகுதிகளில் 45 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன் முட்டை விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/coconut-price-high-in-sri-lanka-1728249449?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version