தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தித் துறையில் மாற்றம் தரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் (Sundaralingam Pradeep) தெரிவித்துள்ளார்.
வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பசுமை பொருள் தரத்தையும், கிராமிய வாழ்வாதாரத்தையும் வழிநடத்தும் மிகப் பாரிய ஓர் துறையே தெங்கு கைத்தொழிற்துறையாகும்.
தெங்கு உற்பத்தி
எனினும், கடந்த காலங்களில் முறையான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் தெங்கு உற்பத்தியானது 12 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன் விளைவே தற்போது நாடு தேங்காய் இறக்குமதியை நோக்கிச் செல்வதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தி துறையில் மாற்றம் தரும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில், தேசிய தென்னை உயிர்த்தெழும் திட்டம், புதிய தொழில்நுட்ப பயிற்சிகள், உற்பத்தி அதிகரிப்பு திட்டங்கள் போன்றன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் எனப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
