Home விளையாட்டு இலங்கையுடனான டெஸ்ட் : தென்னாபிரிக்க அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

இலங்கையுடனான டெஸ்ட் : தென்னாபிரிக்க அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

0

தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் முன்கள வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸி(Gerald Coetzee) இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

டேர்பனில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் பந்துவீசும்போது கோட்சிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

அவருக்கு சுமார் 6 வாரங்கள் ஓய்வு தேவை என்று ஸ்கான் செய்ததில் தெரியவந்துள்ளது.

இரண்டு தொடர்களில் பஙகேற்கமாட்டார்

இதன்படி, இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு(pakistan) எதிராக தனது நாட்டில் நடைபெறவுள்ள தொடரிலும் கோட்ஸி விளையாடமாட்டார்.

கவனம் ஈர்க்கும் மாற்றுவீரர்

இதற்கிடையில், கோட்சியின் வெற்றிடத்திற்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மஃபாகாவை (Kwena Maphaka)அழைக்க தென்னாபிரிக்க கிரிக்கெட் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

மஃபகா விற்கு தற்போதுதான் 18 வயதாகிறது. அவர் 3 ரி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய போது அதிக கவனம் பெற்ற பந்து வீச்சாளராக இருந்தார். 

NO COMMENTS

Exit mobile version