Home உலகம் வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)

வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)

0

கொலம்பியாவின் (Colombia) ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் உரிபே துர்பே மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

போகோட்டாவில் நேற்று (07.06.2025) நடந்த அரசியல் கூட்டத்தின் போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

பொது பூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் பின்னால் இருந்து
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி வேட்பாளரின் கழுத்து பகுதி மற்றும் தலையில் தோட்டா தாக்கியதாகவும், தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர். 

மேலும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் தெரவித்துள்ளார். 

வைரல் காணொளி

தாக்குதலில் வேறு எவரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலம்பிய ஜனாதிபதி அலுவலகம் இந்த வன்முறைத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version