Home இலங்கை சமூகம் கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை : வெளியான புதிய நேர அட்டவணை

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை : வெளியான புதிய நேர அட்டவணை

0

கொழும்பிலிருந்து (Colombo) மட்டக்களப்பிற்கான (Batticaloa) தொடருந்து சேவையில் இன்று (07.03.2025) முதல் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தினால் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடுமீன் கடுகதி
தொடருந்து இன்று காலை  6:15 இற்கு மட்டக்களப்பில் இருந்து  புறப்பட்டு பிற்பகல் 3:30 இற்கு கொழும்பை சென்றடையும்.

தொடருந்து திணைக்களம் 

அத்துடன் புலத்தசி தொடருந்து மட்டக்களப்பில் இருந்து நள்ளிரவு 1.30 இற்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கொழும்பை சென்றடையும்.

மேலும் புலத்தசி தொடருந்து கொழும்பிலிருந்து பிற்பகல் 3:15 இற்கு புறப்பட்டு
நள்ளிரவு 12 மணியளவில் மட்டக்களப்பை வந்தடையும்.

இதுவரை காலமும் கொழும்பிலிருந்து 7 மணிக்கு புறப்பட்ட மட்டக்களப்புக்கான பாடுமீன் கடுகதி
தொடருந்து இன்றிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8:30
அளவில் மட்டக்களப்பை வந்தடையும்.

ஏனைய தொடருந்து சேவைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன்  பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்படுமாறு
தொடருந்து திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version