Home இலங்கை சமூகம் கொழும்பிலிருந்து சென்னை சென்ற சிறிலங்கன் எயார் லைன்ஸ்: நடுவானில் நடந்த துயரம்

கொழும்பிலிருந்து சென்னை சென்ற சிறிலங்கன் எயார் லைன்ஸ்: நடுவானில் நடந்த துயரம்

0

  கொழும்பிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை சென்ற சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணியே உயிரிழந்தவராவார்.

  விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அளிக்கப்பட்ட முதலுதவி

விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து விமானிக்கு தகவலை தெரிவித்தனர்.

பின்னர் விமானி அவசர உதவிக்காக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டார்.

முயற்சிகள் இருந்தபோதிலும், பயணியின் உயிரைக் காக்க முடியவில்லை.

விமான நிலைய காவல்துறையினர்அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.

 

NO COMMENTS

Exit mobile version