Home இலங்கை சமூகம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

0

கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

கடும் பாதிப்பு

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்குக் கடும் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனையின் நடவடிக்கைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு மருந்துகளுக்கான தட்டுப்பாடு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருந்துகளின் தட்டுப்பாடு, எக்ஸ்ரே உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, அதற்கான மென்பொருள் கட்டமைப்பு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அதற்கான காரணமாக அமைந்துள்ளன.

இந்த நிலை கடந்த சில மாதங்களாக படிப்படியாக தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது.

அதன் காரணமாக சத்திரசிகிச்சை போன்ற தேவைகள் கொண்ட நோயாளிகளின் காத்திருப்புக் காலம், அதற்கான பட்டியல் என்பன நீண்டுகொண்டே செல்கின்றது என்றும் மருத்துவர் சமல் சஞ்சீவ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version