கொழும்பு – கண்டி பிரதான வீதியில் யக்கல ஆயுர்வேதத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மையப்பகுதி சரிந்து வருவதாக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, கொழும்பு-கண்டி பிரதான வீதியில் யக்கல மற்றும் திஹாரிய இடையேயான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
