Home இலங்கை குற்றம் கொழும்பைச் சேர்ந்த நபர் கம்பஹாவில் சடலமாக மீட்பு

கொழும்பைச் சேர்ந்த நபர் கம்பஹாவில் சடலமாக மீட்பு

0

கம்பஹா(Gampaha) மாவட்டம், கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்தேகம பிரதேசத்தில்
உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் அறையிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார் என்று கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே நேற்றையதினம்(26) இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த விற்பனை நிலையத்தில் தனியாக வசித்து
வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பூகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக
வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/colombo-man-found-dead-in-gampaha-1740628977

NO COMMENTS

Exit mobile version