Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

0

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை நியமிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

கொழும்பு மேயர்

இந்த நிலையில், கொழும்பு மேயர் நியமனம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version