Home இலங்கை சமூகம் மாணவி அம்ஷிகாவின் விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதி! குற்றவாளி காப்பாற்றப்பட்டாரா

மாணவி அம்ஷிகாவின் விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதி! குற்றவாளி காப்பாற்றப்பட்டாரா

0

தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி அம்ஷிகா தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான சட்டநடவடிக்கைகளும் எடுக்கவில்லை என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி இன்றையதினம்(3) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பொலிஸார் மற்றும் உரிய தரப்பினர் என்ன தீர்மானம் எடுத்துள்ளீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மாணவியின் மரணம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அதுவரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version