Home இலங்கை பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

வரலாறு காணாத அளவில் உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று (09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடுகையில், இது 129.37 புள்ளிகள் உயர்ந்து, சந்தையின் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில், 125 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்த நிலையில், இது ASPIயின் மொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க நேர்மறையான பங்களிப்பை வழங்கியது.

5.98 பில்லியன் ரூபா

இதனால், சந்தையில் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்று (10) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 5.98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version