Home இலங்கை பொருளாதாரம் பாரிய இழப்பை எதிர்கொண்ட கொழும்பு பங்குச்சந்தை

பாரிய இழப்பை எதிர்கொண்ட கொழும்பு பங்குச்சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தை இன்று பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன இறக்குமதிகள் மீது 104 சதவீத வரிகளை
விதித்த அதிர்ச்சி அறிவிப்பைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் ஆபத்தான
சொத்துக்களை விட்டு வெளியேறியதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை
தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது ஒரு முழுமையான உலகளாவிய வர்த்தகப் போரின் அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளது. உலகளாவிய சரிவு உள்ளூர் சந்தையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நிலையற்ற சந்தைகள்

நேற்றைய நாளின் மீட்சியில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை இன்றைய இழப்பு
அழித்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து பங்கு விலைக் குறியீடு 251.76 புள்ளிகள் சரிந்து
14,875.95 இல் நிறைவடைந்தது.

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அபாயங்களை எதிர்கொண்டு முதலீட்டாளர்கள்
எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையால், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு
மத்தியில் சந்தைகள் தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை
தரப்புக்கள் தெரிவித்துள்ளன. 

NO COMMENTS

Exit mobile version