Home இலங்கை சமூகம் கொழும்பு மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும்! களனி கங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

கொழும்பு மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும்! களனி கங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

0

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக களனி கங்கை பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு களனி கங்கையில் பதிவான மிக மோசமான வெள்ளப்பெருக்கு இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட கொழும்பு மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு

அவிசாவெல்லவில் உள்ள நீர் மானி படி, நாளை (29) இரவு அல்லது அதற்குப் பிறகு கொழும்பில் 2016 வெள்ளத்தை விட மோசமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்று (28) பிற்பகல் 1.00 மணிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது.

களனிகங்கைபகுதிக்கு அருகே உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையிலிருந்து உயிர்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான இடங்களை விரைவில் அடையவும் பொதுமக்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version