வயலுக்கு காவலுக்கு சென்று வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த விவசாயிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் கிராமங்களைச் சேர்ந்த 16 விவசாயிகள் கல்நாட்டிவெளி வயல் பகுதிக்கு காவலுக்கு சென்று காட்டு வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த நிலையில் இருந்தார்கள்.
இவர்களை கிராம கடற்தொழிலாளர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து பாதுகாப்பான முறையில் விவசாயிகளை மீட்டிருந்தனர்.
