Home இலங்கை கல்வி சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு

சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு

0

 பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றொரு மாணவர் மூலம் தன்னிடம் கோரிய 80,000 ரூபாய் பணத்தை வழங்க மறுத்ததால், பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தாம் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதாக அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடையச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல், முதற்கட்டத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பரீட்சை முறைக்கேடு

மேலும் இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தவில்லை என அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட சில மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல் எவ்வாறு சித்தியடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் வினவிய போதிலும், அதற்கு இதுவரை தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இதன் மூலம் ஏதோவொரு பரீட்சை முறைக்கேடு இடம்பெற்றுள்ளமை புலப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளமோ பாடநெறியை (2022/2023) பயின்ற மனுதாரர் சார்பில், சட்டத்தரணி தனோஷா பெரேரா மூலம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

 

Source: https://tamilwin.com/article/colombo-univercity-student-files-case-1786412588

NO COMMENTS

Exit mobile version