Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் வண்ணமயமான மலர் கண்காட்சி ஆரம்பம்

நுவரெலியாவில் வண்ணமயமான மலர் கண்காட்சி ஆரம்பம்

0

நுவரெலியா (Nuwara Eliya) நகரில் வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும்
மலர் கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மலர் கண்காட்சியானது  இன்று (20.04.2024) நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்

போட்டி நிகழ்ச்சிகள்

ஏப்ரல் மாத வசந்த காலத்தில் ஒரு கட்டமாக வருடம் தோறும் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியானது இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதில் விதவிதமான மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவ பொம்மைகள், மிருகங்களின்
உருவம், காய்கறிளின் உருவம் என பல வடிவங்களில் உருவ அலங்காரங்களும் சுற்றுலா
பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலர் கண்காட்சியில் அதிகமான அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல
போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். குறித்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு நாளை (21) மாலை
பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர்
கண்காட்சியில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
சி.பி.ரத்நாயக்க மற்றும் கண்டி இந்திய உயர் ஸ்தானிகர் வைத்தியர் எஸ். அதிரா
மற்றும் நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர்  சுஜீவ போதிமான, முன்னாள்
மாநகரசபை முதல்வர்கள் , நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும்
மாநகரபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நுவரெலியா வரும் சுற்றுலாப் பயணிகள், அழகை ரசிப்பதோடு இயற்கையையும்
பாதுகாக்க வேண்டும் என மாநகரநபையினர் கோரிக்கையையொன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்: பாடசாலை மாணவன் பலி

மக்களே தவறவிடாதீர்கள்! தமிழர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உடனடி வேலைவாய்ப்பு

செய்தி- செ.திவாகரன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


NO COMMENTS

Exit mobile version