Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனிற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி

கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனிற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி

0

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்பாளர்களுடனான
கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டார உறுப்பினர்களுடன்
மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

பாதுகாப்பு நிலைமை 

இதன்போது கருத்து தெரிவித்த சிறீதரன், 

“நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பாதுகாப்புக்காக துப்பாக்கி கோருவது தொடர்பாக கேட்ட போது, நாட்டில் ஒரு அச்ச சூழ்நிலை உள்ளதாக ஜனாதிபதியே
குறிப்பிடுகின்றார். நீதிமன்றம் வருபவர்களே சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிரதேச சபை தவிசாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார். போக்குவரத்து பாதையில் கூட
எதுவும் நடக்கலாம் என்ற அஞ்சம் உண்டு அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான
நடவடிக்கையை நாம் வரவேற்கின்றறோம்.

போதைப்பொருள் பாவணை என்பது தென்னிலங்கைக்கு
மாத்திரம் அல்ல வடமாகாணத்திலும் உள்ளது. இதனால் பெருமளவு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள்
கேட்பது. அவர்களின் தனிப்பட்ட உரிமை 2010. நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதல்
தெரிவு செய்யப்பட்டபோது எனக்கு துப்பாக்கி வழங்கப்பட்டது. அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்பு மீள ஒப்படைத்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version