Home இலங்கை சமூகம் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல்ளை பார்வையிட்ட அதிகாரிகள்

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல்ளை பார்வையிட்ட அதிகாரிகள்

0

கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை
கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கமநலசேவை நிலைய
உத்தியோகத்தர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த விஜயத்தினை அவர்கள் நேற்றையதினம் (29) மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாரான பல வயல் நிலங்கள்
மழையினாலும் இரணைமடுக்குளத்தினுடைய வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால்
அழிவடைந்திருந்தன.

அழிவடைந்த பகுதி

இந்தநிலையில், குறித்த பகுதிகளை இன்றைய தினம் கமநல காப்புறுதிச்சபை மற்றும் கமநல சேவை நிலைய
உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

கண்டாவளை, முரசுமோட்டை, பன்னங்கண்டி, உருத்திரபுரம் பெரியகுளம் உள்ளிட்ட
பகுதிகளில் சென்று பார்வையிட்டதுடன் தொடர்ச்சியாக அழிவடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version