இலங்கை பாதாள உலகப் புள்ளிகள் மத்தியில் அடுத்த கோட்பாதராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
இலங்கையில் பாதாள உலகக்கும்பல்களின் உருவாக்கத்தின் பின் நாவல நிஹால் என்பவரே நீண்ட காலமாக கோட்பாதராக இருந்து வந்தார்.
அவரின் மறைவின் நீண்ட காலத்தின் பின்னர் அண்மைக்காலத்தில் மாகந்துறே மதுஷ் என்பவர் குறித்த ஸ்தானத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
போட்டி தீவிரம்
இந்நிலையில் தற்போது பாதாள உலகக்கும்பல் புள்ளிகளுக்கு இடையே மீண்டும் கோட்பாதர் ஸ்தானத்துக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
அதன் பொருட்டு குறிப்பாக கமாண்டோ சலிந்த என்றழைக்கப்படும் அமித் கம்லத்கே திலிண சம்பத் என்பவரிடமிருந்து ஏனைய பாதாள உலகப் புள்ளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெஹெல்பெத்தர பத்மே என்றழைக்கப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா என்பவரின் பிரதான சீடரான கமாண்டோ சலிந்த, கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்லை சஞ்சீவ எனும் பாதாள உலகப் புள்ளியைத் தீர்த்துக்கட்டுவதற்கான திட்டத்தை தீட்டியிருந்தார்.
மோதல்கள்
அதன் பின்னர் தற்போதைக்கு கமாண்டோ சலிந்தவிடம் இருந்து பிரான்ஸ் ரூபன், பாணந்துறை குடு சலிந்து, ஹரக் கட்டா உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகக்கும்பல் புள்ளிகள் மற்றும் அவர்களின் சகாக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் பாதாள உலகக்கும்பல் புள்ளிகளுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் அதன் காரணமாக மரணங்களும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
