Home இலங்கை சமூகம் போக்குவரத்து இணைய அபராதக் கட்டண முறைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

போக்குவரத்து இணைய அபராதக் கட்டண முறைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதால்,
இலங்கையின் அஞ்சல் திணைக்களத்துக் கணிசமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

அஞ்சல்துறை தொழிற்சங்க முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

புதிய டிஜிட்டல் சேவை காரணமாக, அஞ்சல் துறைக்கு குறித்த அபராதக்; கட்டணங்களை
பெறுவதில் இருந்து கிடைக்கும் வருமானம் இல்லாமல் போயுள்ளது என்று அந்த முன்னணி
தெரிவித்துள்ளது.

வருமான இழப்பு

இதன்படி ஆண்டுக்கு, தமது வருமானத்தில் 600 மில்லியன் முதல் 800 மில்லியன்
வரையான இழப்பு ஏற்படும் என்று தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அஞ்சல் திணைக்களம், ஏற்கனவே அஞ்சல் நிலையங்களில், பொலிஸ் அபராதம்
செலுத்துவோருக்கு, ஒரு புதிய குறுஞ்செய்தி அறிவிப்பு முறையை அறிமுகப்படுத்திய
நிலையிலேயே, போக்குவரத்து அபராதங்களுக்கான இந்த புதிய டிஜிட்டல் கட்டணம்
அறிமுகப்படுத்தப்பட்டதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள
தொழிற்சங்கம், அஞ்சல் திணைக்களத்தினால் வடிவமைக்கப்பட்ட எஸ்.எம்.எஸ் அபராத
முறையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version