Home இலங்கை சமூகம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு..

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு..

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் கரவெட்டிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துன்னாலை வடக்கு பகுதியில் பொதுமகன் ஒருவரது காணிக்குள் அத்துமீறி பிரதேச சபை உறுப்பினர் தனது மாடுகளை நேற்று முன்தினம்(11) மேயவிட்டுள்ளார்.

பொலிஸில் முறைபாடு

இந்த விடயம் தொடர்பில் காணி உரிமை யாளர் நியாயம் கேட்ட போது, அவரை தாக்குவதற்கு பிரதேச சபை உறுப்பினர் முயன்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலேயே நெல்லியடி பொலிஸ் நிலையத் தில் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

வேலி அடைக்கப்பட்ட காணிக்குள் குறித்த வேலியை வெட்டி, மாடுகளை மேய விட்டதுடன் காணி உரிமையாளரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version