அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக சலுகை நிவாரணத் திட்டத்தை செயல்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிதிச் சுமைகள்
பல கல்வியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள கடன்கள் உட்பட நிதிச் சுமைகளால் போராடி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது செயல்பாட்டில் உள்ள சுரக்சா காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும், கிடைக்கக்கூடிய சலுகைகள் குறித்த விபரங்கள் தெளிவாக இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் சலுகைகள் அல்லது இரத்து செய்தல் உள்ளிட்ட கல்வியாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
