Home இலங்கை அரசியல் ஆளும் அநுர கட்சிக்குள் குழப்ப நிலை! பதவி விலகும் நிலையில் எம்.பிக்கள்

ஆளும் அநுர கட்சிக்குள் குழப்ப நிலை! பதவி விலகும் நிலையில் எம்.பிக்கள்

0

ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பதவி விலகுவதற்கு அல்லது ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்களின் அழுத்தமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் தலைமை மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிடமே இருப்பதாக தென்னிலங்கை செய்திகள் தொடர்ந்தும் கூறுகின்றன.

இதன் முழுமையான பொறுப்பை வகிக்கக் கூடியவராக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளார்.

இதனாலேயே தேசிய மக்கள் சக்தியில் ஒரு குழப்ப நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,    

NO COMMENTS

Exit mobile version