புதிய பதில் பொலிஸ் மா அதிபருக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை இன்று (08.10.2024) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டிருப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரிலேயே அரசியலமைப்புப் பேரவை கூடவுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் நியமிக்கப்படுவதாக இருப்பின், அதற்காக அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
பிரியந்த வீரசூரிய
முன்னர் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன், உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் தனது பதவியை இழந்தார்.
இதனையடுத்து, அநுரகுமார திசாநயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.